Vijay Antony : ப்ளூ சட்டை மாறன் சொல்றத நம்பாதீங்க..காட்டமாக பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதன்னுடைய துள்ளல் இசையால் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தவர்.
'நான்' திரைப்படம் மூலம் ஹீரோவானார். முதல் படமே வித்தியாசமான கதாபாத்திரமாக அமைந்ததால் நடிகராக நல்ல வரவேற்பை பெற்றார்.
அதை தொடர்ந்து சலீம், சைத்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி உள்ளிட்டோரின் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் 'ரோமியோ'.
வெளியாகும் படங்கள் குறித்து தாறுமாறாக யூடியூப் மூலம் விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன்.
ரோமியோ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான விஜய் ஆண்டனி தன்னுடைய எக்ஸ் தளம் மூலம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதற்கும் ப்ளூ சட்டை மாறன் பதில் ட்வீட் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -