Vijay Antony Daughter : சோகத்திற்கு மேல் சோகம்.. மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனி!
அர்த்தமில்லாத வரிகளுக்கு இசையமைப்பதில் ஹாரிஸ் ஜெயராஜிற்கு போட்டியாக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் விஜய் ஆண்டனி.
பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா என்பதே இவரது ரியல் பெயர். பின், திரையுலகிற்காக, தனது பெயரை அக்னி என மாற்றிக்கொண்டார். அக்னி என்று சொன்னால்தான் பலருக்கும் இவரை தெரியுமாம்.
விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர், அக்னி என்ற பெயர் நன்றாக இல்லை என சொல்லி அவரின் ரியல் பெயரில் இருக்கும் ஆண்டனிக்கு முன்பு விஜய் எனும் பெயரை சேர்த்துவிட்டார்.
இசை அமைப்பதோடும் பாடுவதோடும் நிறுத்திக்கொள்ளாமல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் செம ஹிட்டாகியது. அத்துடன் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி டைரக்டராகவும் அறிமுகமானார்.அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில் இவரின் இசை நிகழ்ச்சி சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல மக்கள் வைப் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது . யூடியூப் சேனல் ஒன்று, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு விஜய் ஆண்டனி முக்கிய காரணம் என வதந்திகளை பரவி அவரை கடுப்பாக்கினர். இதனால் வேதனையடைந்த அவர், அந்த யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார்.
இந்த சோகத்தில் இருந்து வெளிவராத ஆண்டனிக்கு, இன்று காலை மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு நடந்துள்ளது. 12 ஆம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி, திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.