Vignesh Shivan Birthday : குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!
வழக்கமாக விக்னேஷ் சிவன்தான் நயன்தாராவின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு செல்லமே.. தங்கமே..என கொஞ்சி தள்ளுவார்.
சமீபத்தில் இன்ஸ்டா கணக்கை ஆரம்பித்த நயன், இப்போதெல்லாம் விக்கிக்கு ட்ஃப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை பற்றி இந்த ஸ்பெஷலான நாளில் எழுத நிறைய இருக்கிறது. ஆனால் ஒரு சில விஷயங்களை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. என் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் !! நமது உறவு மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் கிடைத்ததற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்களைப்போல யாரும் இருக்க முடியாது. நீங்கள் என் வாழ்க்கையில் வந்து என்னுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியதற்கு நன்றி. நீங்கள் எது செய்தாலும் அது தான் பெஸ்ட். என்னுடைய ஆழ்மனதில் இருந்து என்னுடைய உயிருக்கு அனைத்தும் பெஸ்ட்டாக அமைய வாழ்த்துக்கள். உங்களுக்கு அனைத்து கனவும் நனவாகட்டும். கடவுள் உங்களுக்கு இந்த உலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து ஆசீர்வதிக்கட்டும். ஐ லவ் யூ!!! என ஒரு நீளமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் நயன்.
விக்கியும், கேக் வெட்டி கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா கணக்கில் பதிவிட்டார்.
“இது ஆசிர்வதிக்கப்பட்ட பிறந்தநாள். என் மகன்களுடன் நான் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. லவ் யூ நயன். மாற்றி மாற்றி சர்ப்ரைஸ் செய்தவர்களுக்கு நன்றி” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் விக்கி.
சேட்டை செய்யும் மகன்களை சமாளிக்க, நயன் படாதபாடு படும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.