LIK : லவ் டுடே நடிகரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
இவர் லவ் டுடே படத்தை இயக்கி, நடித்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
லவ் டுடே படத்தை தொடர்ந்து, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டிராகன் போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இதற்கு முன் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என தலைப்பிடப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் டைட்டிலை படக்குழு மாற்றியுள்ளது.
இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
நேற்று பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து, அத்துடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்