Nayanthara Mom : மாமியாருக்கு மனமார வாழ்த்து கூறிய மருமகன் விக்னேஷ் சிவன்!
கோலிவுட்டின் க்யூட் ஜோடிகளுள் நயனும் விக்கியும் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த தம்பதிக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் - உலக் தெய்வீக் என் சிவன் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது, நயன்தாராவின் அம்மாவான ஓமனா குரியனின் பிறந்தநாளையொட்டி பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
“ஓம்னா குரியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஆத்தா அம்மாவே லவ் யூ சோ மச்.. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பலம். உங்கள் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்கள் வாழ்க்கையை மிகவும் அழகாக்குகிறது! நீங்கள் என்றென்றும் வாழ்வீர்களாக.. இப்படிக்கு நயன், விக்கி, உயிர், உலக் .” என தனது மாமியாருக்கு க்யூட் வாழ்த்து பதிவை ஷேர் செய்துள்ளார் விக்கி.
நயன் தனது அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த வாழ்த்து பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -