Nayan Vicky Photos : பழைய நினைவை நெகிழ்வுடன் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!
வழக்கமாக விக்னேஷ் சிவன்தான் நயனின் புகைப்படங்களை, தங்கமே உயிரே என கேப்ஷன் போட்டு இன்ஸ்டாவில் பகிர்வார்
இப்போது, இன்ஸ்டா கணக்கை தொடங்கியதில் இருந்து, பயங்கர ஆக்டீவாக இருக்கும் நயன் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடனும் இரு மகன்களுடனும் ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஹாங்காங்கிற்கு சென்ற முதல் நாளில் இருந்து ரொமாண்டிக்கான, அழகான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதனையடுத்து “இந்த இடத்திற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் செருப்புடனும் கையில் ஆயிரம் ரூபாயுடனும் வந்து போடா போடி படத்தின் ஷூட்டிற்காக அனுமதி பெற வந்தேன்.. இப்போது என் மனைவி, குழந்தைகளுடன் வந்துள்ளேன். இந்த தருணம் உணர்ச்சிகரமாகவும் திருப்தியாகவும் உள்ளது” என்ற கேப்ஷனுடன் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன் .