Banana Bread Recipe : சுவையான வாழைப்பழ ப்ரெட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பட்டை தூள், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில், உப்பில்லாத வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒன்றன் பின் ஒன்றாக இரண்டு முட்டைகளை சேர்த்து கிரீமியாக வரும் வரை பீட் செய்யவும். நறுக்கிய வாழைப்பழம் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
இப்போது மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு சாக்லேட் சிப்ஸ் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
பேக்கிங் டின்னில் உள்ளே வெண்ணெய் தடவி ப்ரெட் கலவையை சேர்க்கவும்.சமமாக பரப்பி காற்று குமிழ்கள் வெளியேற டின்னை தட்டவும்.
மைக்ரோவேவ் ஓவனை 175°C 15 நிமிடம் முன் கூட்டியே சூடு செய்யவும். பேக்கிங் டின்னை வைத்து 175°C 70 நிமிடம் பேக் செய்யவும்.
ஆறிய பிறகு டின்னில் இருந்து பிரட் -ஐ எடுத்து துண்டுகளாக வெட்டவும். சுவையான சாக்லேட் சிப்ஸ் வாழைப்பழ ப்ரெட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -