VidaaMuyarchi Update : 110 நாட்களுக்கு கால் ஷீட் கொடுத்த அஜித்..அசர்பைஜானில் நடக்கவிருக்கும் விடாமுயற்சி ஷூட்!
தடம் படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட இயக்குநர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரை வைத்து விடாமுயற்சி என்ற தலைப்பில் படத்தை இயக்கவிருக்கிறார்.
அதன் பிறகு படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் பட குழுவும் தயாரிப்பு நிறுவனமும் கொடுக்காமல் இருந்தனர்.
வழக்கமாக அஜித் குமாரின் முந்தைய படங்களின் சூட்டிங்கில் இருந்து அப்டேட் வராமல் இருக்கும். ஆனால் இந்த முறை விடாமுயற்சி படத்திற்கு சூட்டிங் போனார்களா? அல்லது படத்தை நிறுத்தி விட்டார்களா? என்ற பெரும் குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
தற்போது படத்தின் ஷூட் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் படக்குழு சூட்டிங் பணிக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருப்பதாகவும் அங்கு படத்தின் சில காட்சிகளை எடுக்க இருப்பதாகவும் அதன் பிறகு வட இந்தியாவில் படத்தின் காட்சிகளை எடுக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி விடாமுயற்சி திரைப்படத்திற்காக நடிகர் அஜித்குமார் 110 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.