Vegetable Kurma: தோசை, சப்பாத்திக்கு இந்த சைடிஷ் செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
ஒரு கடாயில் தனியா, சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மற்றும் பொட்டு கடலை சேர்த்து வறுத்து, ஆறவிடவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமசாலா பொருட்கள் ஆறியதும் அதனுடன், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஊறவைத்த முந்திரி பருப்பு, ஊறவைத்த கசகசா மற்றும் துருவிய தேங்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில், எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து உப்பு சேர்த்து, அதில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, காய்கறிகளை பாதி அளவு வேகவிடவும். பின் அதில் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, காய்கறிகளை பாதி அளவு வேகவிடவும். பின் அதில் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -