Nayanthara Wikki: ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தார, விக்னேஷ் சிவன் - லேட்டஸ்ட் க்ளிக்!
தென்னிந்திய சினிமாவே 'லேடி சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்படும் அளவுக்கு ஆளுமையான ஒரு நடிகையாக தன்னுடைய உயர்த்தி கொண்டவர் நடிகை நயன்தாரா.2005ம் ஆண்டு வெளியான 'ஐயா' படத்தில் பாவாடை தாவணி போட்ட ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார்.
சந்திரமுகி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு. ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவரின் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தார். அதன் பிறகு நயன்தாரா பல்வேறு படங்களில் நடித்தார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடிக்க தொடங்கினார். பாலிவுட்டில் 'ஜவான்' படம் மூலம் அடியெடுத்து வைத்த நயன்தாராவுக்கு முதல் படத்திலேயே பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இயக்குநர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கலுக்கு உயிர், உலக் என்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இருவரும் ஹாங்காங் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் இவர், தொழிலதிபராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் .பெமி 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட், 9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி உள்ளிட்ட பல பிசினஸ் செய்து வருகிறார். ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இவருடையதுதான்.
இப்போது மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி ஜோடியாக 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.