ARR and Vadivelu : மாமன்னனில் சங்கமித்த இசைப்புயலும் வைகைப்புயலும்.. புதிய பாட்டு ஒன்னு பார்சல்!
தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி திரையுலகினர், ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குநரானார் மாரி செல்வராஜ். அவரின் அடுத்தப்படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகி வருகிறது.
இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மே 1 ஆம் தேதி இரண்டாவது போஸ்டரும் வெளியானது. இவை இரண்டும் ரசிகர்களை கவர்ந்தது.
கையில் துப்பாக்கியுடன் வெள்ளை வேட்டி, சட்டையில் வடிவேலுவும், வாளுடன் உதயநிதி ஸ்டாலினும் இருக்க “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கேப்ஷனும் போஸ்டரில் இடம் பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய மாமன்னன் படத்தின் ஷூட்டிங் சேலம், சென்னை என பல பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காமெடி செய்வதை தவிர்த்து, அவரின் தனித்துவமான குரலில் பாடி அசத்தும் வடிவேலு, இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வடிவேலுவுடன் இணைந்து இந்த பாடலை பதிவு செய்த அனுபவம் மறக்க முடியாதது. காரணம் அவர் ஸ்டுடியோவில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாற்றினார்” என தெரிவித்துள்ளார். மாமன்னன் குழுவின் புதிய புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.