Maamannan trailer : 'உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருப்பேன்..’ ட்ரெண்ட் ஆகும் மாமன்னன் ட்ரெய்லர்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருந்தது.
வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படம் போலவே ஜாதி அரசியல் பேசியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் உணர்ச்சிகள் நிறைந்ததாக உள்ளது.
வடிவேலுவின் உணர்ச்சிகரமான நடிப்பும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
குறிப்பாக ட்ரெய்லரின் இறுதியில் வரும் பின்னணி இசை அசத்தலாக அமைந்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கும் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு கம்யூனிஸ்ட் பெண்ணாக நடித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.