Leo First single : நான் ரெடி...நீங்க ரெடியா? யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்த லியோ அப்டேட் !
விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான் என திரைபட்டாளமே நடிக்கின்றனர்.
லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அப்டேட் யாரும் எதிர்பாரத வகையில் தற்போது வெளியிடபட்டுள்ளது. முன்னதாக ட்விட்டரில் லோகேஷ் கனகராஜ் ரெடியா ? என பதிவிட்டிருந்தார். அப்போது புரியாத அந்த ட்வீட் இப்போதுதான் புரிகிறது.
தற்போது லியோ படத்தின் முதல் பாடலாக ‘அல்டர் ஈகோ - நான் ரெடி’ வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜுன் 22 ஆம் தேதியன்று, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிபெண்கள் பெற்ற மாணவன், மாணவிகளுக்கு நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் வைத்து பாராட்டு விழா நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -