12 years of OKOK : உதயநிதியின் அறிமுகம்.. சந்தானத்தின் சரவெடி காமெடி..12 ஆண்டுகளை நிறைவு செய்த OKOK!
'சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் எம். ராஜேஷ் அப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு கல் ஒரு கண்ணாடி... ' என்ற பாடலின் வரிகளை தனது மூன்றாவது படத்தின் டைட்டிலாக வைத்து வெளியிட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம்.
படத்தின் ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடித்து இருந்தார்.
ஹீரோவின் நண்பனாக சிரிப்பு சரவெடியாக டைமிங் காமெடியை படம் முழுக்க தெளிக்கவிட்டு சிரிப்பொலியை எழுப்ப செய்தார் நடிகர் சந்தானம்.
அலற வைக்கும் பஞ்ச் டயலாக், ஆக்ஷன் காட்சிகள், சிக்ஸ் பேக் தோற்றம் என எந்த ஒரு அமைப்பும் இல்லாமலேயே முதல் படத்திலேயே ஹீரோவாக கவனம் பெற்றார் உதயநிதி.
ஹன்சிகா மோத்வானி படம் முழுக்க பளபளப்பாக ரசிகர்களை கவர்ந்தார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
ஒரு நல்ல நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான OKOK வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -