Automobile News : சொகுசான இருக்கை வசதிகளை கொண்ட கார்கள் - அதுவும் ரூ.12 லட்சம் பட்ஜெட்டிற்குள்!
ரூ.12 லட்சம் பட்ஜெட்டிற்குள் சொகுசான இருக்கை வசதி கொண்ட கார்களின் லிஸ்ட்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாடா அல்ட்ரோஸ், ஒரு சிறந்த பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். தரமான மற்றும் மிகவும் வசதியான இருக்கைகளை கொண்டுள்ளது.சிறந்த லிங் டிஸ்டன்ஸ் க்ரூஸர் மற்றும் தேவையான அனைத்து அம்சங்களுடனும் வருகிறது. தொடக்க விலை ரூ.6.64 லட்சம்
ஹோண்டா எலிவேட் மெல்ல மெல்ல ஹோண்டாவிற்கு அதிக விற்பனையாகும் மாடலாக மாறியது. SUV வடிவில் இருந்தாலும், சிட்டி மாடலில் இருந்த அதே சிறந்த சௌகரியம் மற்றும் சவாரி தரத்தை வழங்குகிறது. ஆரம்ப விலை ரூ.11.91 லட்சம்
ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறிய எஸ்யூவிகளில் ஒன்றாகும். மிகவும் வசதியான இருக்கைகளுடன், கேபினைச் சுற்றி போதுமான இடவசதியையும் கொண்டுள்ளது. டாப் எண்டில் வெண்டிலேட்டர் இருக்கைகள் உள்ளன. ஆரம்ப விலை ரூ.10.99 லட்சம்
ஹூண்டாய் வெர்னா பல அம்சங்கள் நிறைந்த செடான் ஆகும். மிகவும் வசதியான இருக்கைகளுடன் வருவதோடு, ஹீட் மற்றும் கூல்டு இருக்கைள் வெர்னா டாப் எண்டில் வழங்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.11.04 லட்சம்
கியா செல்டோஸ் ஹூண்டாய் க்ரெட்டாவை அடிப்படையாகக் கொண்டது. அதே போன்ற இருக்கைகளையும் வழங்குகிறது. மிகவும் வசதியானது மற்றும் நீண்ட பயணங்களுக்கு சிறந்தது. செல்டோஸின் ஆரம்ப விலை ரூ.10.89 லட்சம்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி சுசுகி பலேனோவும் ஒன்று. இது மிகவும் வரிசைப்படுத்தப்பட்ட சவாரி தரத்துடன் வசதியான இருக்கைகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப விலை ரூ.6.66 லட்சம்
டாடா நெக்ஸான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். அதன் சவாரி தரம் மற்றும் வசதிக்காக இது பாராட்டப்படுகிறது. சில டாப் எண்ட் வேர்யண்ட்களில் வெண்டிலேட்டர் இருக்கை உள்ளது. ஆரம்ப விலை ரூ.8.15 லட்சம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -