Kadalai Paruppu Payasam : இந்த தமிழ் புத்தாண்டுக்கு சுவையான கடலைப்பருப்பு பாயசத்தை செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு - 1 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், தேங்காய் பால் - 1 கப், வெல்லம் - 250 கிராம், சுக்கு தூள் - 1 தேக்கரண்டி, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி, திராட்சை - 1 மேசைக்கரண்டி, தேங்காய் - 2 மேசைக்கரண்டி சிறு துண்டுகளாக நறுக்கியது, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் பிரஷர் குக்கரில் சுத்தம் செய்யப்பட்ட கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, வெல்லத்தை போட்டு கரைக்கவும். வெல்லம் கரைந்த பின் சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கவும். அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் வெல்லப்பாகை வடிகட்டி ஊற்றி சூடாக்கவும். வெல்லப்பாகு கொதித்தவுடன் அதில் வேகவைத்த பருப்பு கலவையை போட்டு நன்கு கலக்கவும்.
இதில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தீக்கு மாற்றி தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகளை போட்டு கலக்கவும். அவ்வளவு தான் சுவையான கடலை பருப்பு பாயசம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -