Trisha Marriage Rumour : அட இந்த முறையும் வதந்திதானா.. திரிஷா செய்த ட்வீட்டை நீங்களே பாருங்கள்!
2002 ஆம் ஆண்டில் மெளனம் பேசியதே படத்தில் தொடங்கிய திரிஷாவின் திரைப்பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரண்டு தசாப்தங்களாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய நான்கு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா, லியோ படம் மூலம் அவருடன் ஐந்தாவது முறையாக இணைந்துள்ளார்.
முன்னதாக திரிஷாவிற்கும் தொழிலதிபரான வருணிற்கும் நிச்சயம் நடந்தது. திருமணம் வரை சென்ற இந்த உறவு ஒரு சில காரணங்களால் நின்று போனது.
பின் எங்கு பார்த்தாலும் ‘திரிஷாவிற்கு இங்குதான் கல்யாணம்..’ திரிஷாவிற்கு இவருடன் கல்யாணம் நடக்கவுள்ளது.. அவருடன் கல்யாணம் நடக்கவுள்ளது’என பல வதந்திகள் பரவி வந்தது.
சமீபத்தில் மலையாள சினிமாவின் தயாரிப்பாளர் ஒருவரை திரிஷா மணம் முடிக்க உள்ளார் என்ற தகவல் பரவியது. இது உண்மையாக இருக்கும் என்று பார்த்தால், வழக்கம் போல் இதுவும் வதந்தி என சிம்பிளாக முடித்துவிட்டார் திரிஷ். பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லியோ பட பாணியில் திரிஷா பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -