Trisha Marriage Rumour : தென்னிந்திய திரையுலகில் கலக்கி வரும் திரிஷாவுக்கு திருமணமா?
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் திரிஷா. “பொன்னியின் செல்வன்” மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
பல நட்சத்திரங்கள் நடிக்கும் லியோ படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
20 ஆண்டுகள் திரைத்துறையில் கொடி கட்டி பறக்கும் திரிஷாவுக்கு 40 வயது ஆகியுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
இது குறித்து சமீபத்தில் திரிஷா அளித்த பேட்டியில் “சிநேகிதர்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தது எனக்கு தெரியவந்தது. அதனால் வாழ்நாள் முழுவதும் என்னோடு இணைந்து பயணம் செய்பவரை மட்டுமே நான் மணப்பேன்” என்றார்
இந்த நிலையில் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திருமண உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் திரிஷா. இதனை நோட்டமிட்ட நெட்டிசன்கள் திரிஷாவிற்கு திருமணம் ஆசை வந்ததாகவும் , அவர் இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய போவதாகவும் வதந்திகளை பரப்பி வந்தனர்.
இந்த வதந்தியை அறிந்த திரிஷாவிற்கு நெருக்கமானவர்கள் இதனை மறுத்துள்ளனர்.