Year Ender 2023 : 2023ல் டிக்கெட்களை விற்றுத்தீர்ந்த டாப் 5 தமிழ் படங்கள்!
2023ம் ஆண்டில் எக்கச்சக்கமான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தூள் கிளப்பின. குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிக அளவிலான டிக்கெட் விற்பனை செய்த டாப் 5 படங்களின் பட்டியல் இங்கே...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதுணிவு : ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸாக ரிலீசான திரைப்படம் துணிவு. இப்படம் இந்த ஆண்டின் சிறந்த ஓப்பனிங் படமாக அமைந்தது. டிக்கெட் விற்பனை அடிப்படையில் துணிவு படம் 5வது இடத்தை பிடித்தது
வாரிசு : நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் 2023ம் ஆண்டு பொங்கல் ரிலீசானது. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான இப்படம் டிக்கெட் விற்பனை அடிப்படையில் 4வது இடத்தை பிடித்தது.
பொன்னியின் செல்வன் 2 : மணிரத்னம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை மையமாக வைத்து வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விக்ரம், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி மற்றும் பலர் நடித்திருந்த படம் டிக்கெட் விற்பனையில் 3வது இடத்தை பிடித்தது
லியோ : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்த 'லியோ' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் அடிப்படையில் முதலிடத்தை பிடித்த லியோ திரைப்படம் டிக்கெட் விற்பனையில் 2வது இடத்தை பிடித்தது.
ஜெயிலர் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்தது. வசூலில் வேட்டை செய்த ஜெயிலர் திரைப்படம் டிக்கெட் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -