Tom Cruise : இவருக்கு வயசே ஆகாதா.. வெளியாகி மாஸ் காட்டி வரும் டாம் க்ரஸின் மிஷன் இம்ப்பாசிபில் - டெட் ரெக்கோனிங் 1 ட்ரெய்லர்!
டாம் க்ரூஸின் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் பட தொடரில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த வருடத்தில் டெட் ரெக்கோனிங்கின் முதல் பாகம் வெளியாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னர் வெளியான மிஷன் இம்பாசிபிள் படத்தின் ரோக் நேஷன், ஃபால்-அவுட் ஆகிய படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவாரி, டெட் ரெக்கோனிங்கின் இரண்டு பாகங்களையும் இயக்கி வருகிறார்.
மிகப்பெரிய செலவில் எடுக்க பட்டுள்ள இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தில் வரும் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளிலும் டூப் இல்லாமல், டாம் க்ரூஸே நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து டாம் க்ரூஸை பாராட்டினார்.
தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வருடத்திற்குள் மிஷன் இம்ப்பாசிபில் - டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -