Pichaikaaran 2 : ‘பிச்சைக்காரன் 2வில் நடிக்க ஏற்றவர் மகேஷ் பாபு..’ வைரலாகும் விஜய் ஆண்டனி பேச்சு!
முதல் பாகத்தின் வெற்றிக்கு பின்பு, பிச்சைக்காரனின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்க முடிவெடுத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய் ஆண்டனி பெரும் விபத்துக்குள்ளானார்.
ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
‘ஆன்டி பிகிலி’என்ற வாசகம், இப்படத்தின் அனைத்து போஸ்ட்ரகளிலும் இடம்பெற்று மக்களின் ஆர்வத்தை தூண்டியது.
பிகிலி என்பது இப்படத்தின் வில்லனின் பெயராக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் பின் படக்குழுவானது, ஆன்டி பிகிலியாக விஜய் ஆண்டனியே நடித்துள்ளார் என மக்களின் கேள்விக்கு பதிலளித்தது.
தற்போது ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடிக்க ஏற்றவர் மகேஷ் பாபு. இந்த படத்துக்கு தேவையான எக்ஸ்பிரஷன், மற்றும் உடல்மொழி அவரிடம் உள்ளது” என பேசியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -