Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mission Impossible 7 Review : சாகசங்களின் நாயகன் டாம் குருஸின் மிஷன் இம்பாசிபிள் 7 படம் எப்படி இருக்கு? குட்டி விமர்சனம் இதோ !
ஹாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோ’ என்று சொல்லப்படும் டாம் குருஸ் இப்படத்தின் கதாயாகனாக மற்றும் ரெபெக்கா ஃபெர்குசன், ஹேய்லி ஆட்வெல், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகதைக்களம் : ரஷ்யா ஒரு புதுவிதமான செயற்கை நுண்ணறிவுக் கருவியைக் கண்டுபிடிக்கிறது. இதற்கு என்டிடி என்று பெயர்.
இந்த கருவியை கொண்டு ஒரு நாட்டில் அணு ஆயுதத்தை கட்டுப்படுத்தலாம், தொழில்நுட்ப அடிப்படையில் இயக்கும் எந்த ஒரு இயந்திரத்தையும் இதனால் கட்டுப்படுத்த முடியும்.
இப்படியான ஒரு இயந்திரம் யார் கைகளுக்கு வருகிறதோ, அவர்கள் உலகத்தை எப்படியானதாக இருக்க தீர்மானிக்கிறார்களோ அப்படியானதாக மாற்றிவிட முடியும்.
இதை கட்டுப்படுத்தவோ அழிக்கவோ ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடிய இரண்டு சாவிகள் இருப்பவர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இந்த இரண்டு சாவிகளை தேடுவதற்கான வேலை ஈத்தனிடம் ஒப்படைக்கப்படுகிறது இதுதான் படத்தின் கதை.
இப்படத்தின் மிகப்பெரிய ஸ்டண்ட் எல்லாம் மிக அசட்டுத்தனமான காரணங்களுக்காக செய்தவையாக எளிதில் தோன்றிவிடுகின்றன. அதே சமயம் படத்தின் முக்கிய வில்லனாக இருப்பது சுயமாக சிந்திக்கும் திறன்கொண்ட ஒரு ரோபோட். இதனால் டாம் குருஸ் அசால்ட்டாக எதிரியை வென்றுவிடுவது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.
மொத்ததில் டாம் குருஸ் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும். வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இது இல்லாதது இப்படத்தின் குறையாக அமைந்திருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -