Past Lives Movie Review: கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே நடக்கும் காதல் போராட்டம்..பாஸ்ட் லைவ்ஸ் திரைப்படத்தின் குட்டி ரிவ்யூ!
கொரியாவை சேர்ந்த அமெரிக்க நாடக எழுத்தாளரான செலினா சாங் இயக்கத்தில் க்ரிடா லீ, டீயோ யூ மற்றும் ஜான் மகெரோ நடித்துள்ள திரைப்படம் ‘பாஸ்ட் லைவ்ஸ்’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபள்ளி பருவத்தில் ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்புடைய குழந்தைகள் இருவர், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக வெவ்வேறு நாடுகளுக்கு பிரிந்துவிடுகிறார்கள். பிரிந்த இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? மாறாதது எவை? என்பதே பாஸ்ட் லைவ்ஸ் திரைப்படம்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திக்கிறார்கள் அப்போது நோரா என்று பெயர் மாற்றி கொண்டுள்ள ஹே சங்கிற்கு திருமணம் ஆகி இருக்கிறது. நா யங்கும் வேறொரு சீன பெண்ணை காதலிக்க தொடங்கிவிட்டார். நியுயார்கில் சந்திக்கும் நோரா மற்றும் நா யங்கும் சேர்கிறார்களா? ஹே சங் மற்றும் ஆர்தரின் திருமண உறவிற்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்பதே மீதி கதை.
இப்படத்தின் நடிகர்களான டீயோ யூ, க்ரிடா லீ மற்றும் ஜான் மகெரோ என அனைவரும் இயல்பான நடிப்பை வெளிபடுத்தி ஈர்க்கின்றனர். குறிப்பாக கொரிய-அமெரிக்கரான க்ரிடா லீ மற்றும் முழுக்க முழுக்க கொரிய ஆணான டியோ யூ ஆகிய இருவரும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்திருக்கின்றனர்.மேலும் திரையில் அவ்வளவு நேரம் பயணிக்கவில்லை என்றாலும் கூட நல்ல புரிதல் உடைய கணவர் கதாபாத்திரத்தில் நடித்து மனங்களை கவர்கிறார் ஜான் மகரோ.
உணர்ச்சி மிகுந்த வசனங்கள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் வயதிற்கு ஏற்றார் போல் மாறும் நடிகர்களின் தோற்றம் இயல்பாக அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. குறை என்று பார்க்கையில் படத்தின் திரைக்கதை சற்று மெதுவாக இருந்தது அவ்வப்போது கொட்டாவி வர வைத்தது.
மொத்ததில் கொரியன் வாசனை மாறாமல் எடுக்கப்படிருக்கும் அமெரிக்க திரைப்படமான ’பாஸ்ட் லைவ்ஸ்’, காதல் திரைப்படப் பிரியர்களுக்கு நல்ல ஒரு உணர்ச்சிகரமான விருந்தாகவே இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -