Cinema Update : சாக்லேட் பாய் ஹீரோக்களை பற்றி வெளியான சுவாரஸ்யமான அப்டேட்!
2013 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளிவந்த நகைச்சுவை படம் தேசிங்கு ராஜா. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில், படத்தின் 2 ஆம் பாகத்திற்கான வேலைகள் கூடிய விரைவில் தொடங்கவுள்ளதாம்.
விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து மகாராஜா படத்தை எடுக்கலாம் என இயக்குநர் நித்திலன் முடிவு செய்து வைத்திருந்தாராம். பின்னர் தயாரிப்பாளர் கேட்டதற்கு இணங்க விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் அசுரத்தனமாக நடித்து மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் ஆவேஷம். தற்போது ஆவேஷம் படம் தமிழில் டப் செய்யப்பட்டு அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் படம் லக்கி பாஸ்கர். இந்த படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் பரவி வரும் நிலையில், ஜி வி பிரகாஷ் குமார் இசையில் “கொல்லாதே” என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்க உள்ள புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் தயாரிக்க உள்ளதாகவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.