Cinema Update : சித்தார்த்தின் 40 வது படத்தில் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் தெரியுமா?
சித்தார்த்தின் 40 வது படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்க உள்ளார். இப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ட்ராக் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரியோ ராஜின் புதிய படத்தின் சூட்டிங் 40 நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இப்படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் எனவும் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி, தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு உடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தனுஷின் 50 வது படமான ராயன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சில காரணங்களால் படத்திலிருந்து விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.