Today Cinema Update: சரத் குமாரின் 150 வது படத்தின் அப்டேட். சுவாரசியமான சினிமா தகவல்கள்!
ஜூன் 14 இன்று சரத் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 150 வது படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை ஷியாம் பிரவீன் இயக்கி வருகிறார்.
விஜய் மில்டன் இயக்கி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சரத் குமாரின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை ரஜினிகாந்த் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட காட்சிகளை சூட் செய்ய போவதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ் ஆர் பிரபாகரன் தயாரித்து, இயக்கி வரும் ரெக்கை முளைத்தேன் படத்தின் ஹே அழகியே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
அறம் பொருள் இன்பம் என்ற படத்தின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அந்தாலஜி படத்தின் மூலம் கீதாஞ்சலி இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.e 5
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த ஆடுஜீவிதம் படம் வருகின்ற ஜூலை 19 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தலத்தில் வெளியாக உள்ளது.