Cinema Updates : சூது கவ்வும் 2... காஞ்சனா 4.. அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வரும் தமிழ் சினிமா!
சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடராஜன் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மைக் மோகன், யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ள ஹாரா படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இந்த படம் நாளை வெளியாகவிருக்கும் அஞ்சாமை, வெப்பன் படங்களோடு வெளியாக உள்ளது.
சிவா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் நடித்துள்ள சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை எஸ் ஜே அர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து என்ன நடக்கும் என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ராகவேந்திரா ப்ரொடக்ஷன் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 பாகத்தை இயக்கி, நடிக்க போவதாக தகவல்கள் பரவிவருகிறது. செப்டம்பர் மாதம், இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நலன் குமாரசாமி கார்த்தியை வைத்து இயக்கும் படம் வா வாத்தியார். இந்த படத்தை 90 களில் வெளிவந்த கமர்ஷியல் படங்களுக்கு சமர்ப்பிப்பதாக நலன் குமாரசாமி தெரிவித்துள்ளார். சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
அட்டகத்தி தினேஷை ஹீரோவாகவும், ஆர்யாவை வில்லனாகவும் வைத்து பா. ரஞ்சித் படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அந்த படத்திற்கு “வேட்டுவம்” என்று தலைப்பிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.