Surya- Jyothika:'ஒன்றா ரெண்டா ஆசைகள்’..பாடல் வரிகளை குறிப்பிட்டு ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு!
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா, மகேஷ் பாபு, மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான், ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதில் ஜோதிகா பிங்க் நிற பட்டு புடவையில் அழகா மிளிர்ந்தார். சூர்யா பட்டு வேட்டி சட்டை கட்டியிருந்தார். பிரபலங்கள் கொண்டாட்டங்களின் புகைப்படங்க்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கியூட் ஜோடிகளான சூர்யா - ஜோதிகா தம்பதி 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் மூலம் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடிதுள்ளார். மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.
ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா? என்ற காக்க காக்கா பாடல் வரிகளை கேப்சனாக குறிப்பிட்டுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. ஜோதிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துயுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -