விடாமுயற்சி முதல் வாஸ்கோடகாமா வரை.. இன்று வெளியாகியுள்ள சினிமா அப்டேட்ஸ்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடித்து வரும் படம் நேசிப்பாயா. படத்தின் ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். ஆகாஷ் முரளி மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் டீசல் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்து வரும் மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ஆர் ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்துள்ள வாஸ்கோடகாமா படம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தை மிக தீவிரமாக இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தென் அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. கல்யாண் மாஸ்டர் கோரியோகிராஃபியில் படத்தின் முதல் பாடல் சூட்டிங் முடிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.