Varalaxmi Meets PM Modi : பிரதமர் மோடியை திருமண அழைப்பிதழ் உடன் சந்தித்த சரத்குமார் குடும்பம்!
சமீபத்தில் சமத்துவ மக்கள் கட்சியை பாரத ஜனதா கட்சியுடன் இணைத்த சரத்குமார், அவரின் மனைவி ராதிகாவை விருதுநகர் தொகுதியில் கடந்த மக்களவை போட்டியிட செய்தார்.
அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் அக்குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கவுள்ளது. சரத்குமார் மகள் வரலட்சுமிக்கும் மும்பையை சார்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவருக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணம் நெருங்கி வரும் சூழலில் அதற்கு தேவையான ஏற்பாடுகளிலும், திருமண அழைப்பிதழ் வைக்கும் வேலையிலும் சரத்குமார் குடும்பம் பிசியாகிவிட்டனர். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த மணமக்கள் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதாகவும் வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, நிக்கோலஸ் சச்தேவ் உள்ளிட்டோர் அழைப்பிதழை கொடுக்கும் போது புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிரதமர் மோடியுடன் கூல் செல்ஃபி எடுத்துக்கொண்ட வரு.