Cinema News : வெற்றி மாறனுக்கு வந்த சோதனை.. வாடிவாசல் படப்பிடிப்பில் என்னாச்சு தெரியுமா?
பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் இசையமைக்கும் பணி முடிந்துவிட்டதாக ஜி வி பிரகாஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். மேலும் படத்தின் டிரெய்லர் கூடிய விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.
ஜே எம் ராஜா இயக்கி வரும் படத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடித்து வருகிறார். படத்திற்கு சிங்காநல்லூர் சிக்னல் என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடித்து வரும் படம் பாட்டில் ராதா. இப்படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு ஆர்யா மற்றும் சிலம்பரசன் வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
“வாடிவாசல் படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியை எடுக்க 50 முதல் 60 நாட்கள் ஆகுமாம். முடிந்தால் அதனை எடுக்க முயற்சி செய்வேன். இல்லாவிட்டால் சூட் செய்யாமல் விட்டுவிடுவேன்” என வெற்றி மாறன் கூறியுள்ளார். மேலும், “முன்பெல்லாம் இப்படி இருந்தது இல்லை. எத்தனை கஷ்டம் வந்தாலும் சூட்டிங் முடித்துவிடுவேன். பின் அது வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்வேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் காலெண்டர் என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஜூலை 12 தேதி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.