Doctor Based Movies: மருத்துவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்

2004 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்த படம் வசூல்ராஜா MBBS . ஒரு ரவுடி, டாக்டராக முயற்சி செய்தால் என்ன கலாட்டா நடக்கும் என்பதே படத்தின் கதை. இப்படம் ஹிந்தியில் வெளிவந்த முன்னா பாய் MBBS படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2014 ஆன் ஆண்டு நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருந்த படம் சலீம். இந்த படம் 2012 இல் வெளிவந்த நான் படத்தின் இரண்டாம் பாகமாகும். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான வித்யாசமான திரில்லர் படம் இது.

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் , ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து இருந்த தர்மதுரை படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா டாக்டராக நடித்து இருந்தனர்.
2017 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்து இருந்த படம் மெர்சல். மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். விஜய் படத்தில் 5 ரூபாய் டாக்டராக நடித்து இருந்தார்.
2021 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து இருந்த படம் டாக்டர். இது ஒரு டார்க் காமெடி படம். படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் வேலை செய்யும் மருத்துவராக நடித்து இருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -