Thiagarajan Prasanth Movies : தியாகராஜன் பிரசாந்த் கூட்டணியில் வெளிவந்த படங்கள்!
2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஷாக் படத்தின் மூலம் முதன் முறையாக தியாகராஜன் மற்றும் பிரசாந்த் இணைந்தனர்.
இது தமிழில் வெளிவந்த ஹாரர் த்ரில்லர் படமாகும். இப்படத்தில் மீனா, தியாகராஜன், அப்பாஸ், சரத் பாபு ஆகியோர் நடித்து இருந்தனர்.
2011 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னர் சங்கர் படத்தின் மூலம் பிரசாந்த் மற்றும் தியாகராஜன் இரண்டாவது முறையாக இணைந்தனர்.
இப்படம் மு கருணாநிதி எழுதி வெளிவந்த பொன்னர் சங்கர் நூலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரசாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2011 ஆம் ஆண்டு மம்பட்டியான் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக பிரசாந்த் மற்றும் தியாகராஜன் இணைந்தனர்.
மம்பட்டியான் படம் 80-களில் தியாகராஜன் நடிப்பில் வெளிவந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீ-மேக் ஆகும். மம்பட்டியான், மலையூர் நாட்டாமை, சின்ன பொண்ணு சேலை பாடல்கள் சிறப்பாக அமைந்தது.