OTT Releases : அக்டோபர் முதல் வாரத்தில் என்னென்ன படங்கள் வெளியாகிறது?
அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஓ.எம்.ஜி 2. முதல் பாகம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாலியல் கல்வி குறித்தான அவசியத்தை நகைச்சுவை கலந்த ஒரு படமாக அமைந்திருக்கும். இது வருகின்ற அக்டோபர் 8 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலிவுட்டின் இளம் இயக்குநர்களில் ஒருவரான விஷால் பரத்வாஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் கூஃபியா. தபூ, வமிகா கபி உள்ளிட்டவரகள் நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 5 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியது.
ஹாலிவுட் ஹாரர் திரைப்படங்களில் மிக புகழ்பெற்ற பிராஞ்சைஸ் நன் படவரிசை. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தி நன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகியது. தற்போது அமேசான் பிரைமில் நன் படத்தை தற்காலிக வாடகை முறையில் பார்க்கலாம்.
ஹோசே மானுவல் இயக்கியிருக்கும் திரைப்படம் ஏ டெட்லி இன்விடேஷன். இப்படம், அக்டோபர் 6 ஆம் தேதியான இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
மஞ்சு கார்த்திக் இயக்கத்தில் சத்யா ஷ்ரயா மற்றும் சுப்ரிதா சத்ய நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெல்டி டிராமா. கிரண் ரவிந்திரநாத் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 6 ஆம் தேதி, நம்ம ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மோகின் ரயினா, நடாஷா பரத்வாஜ் ஷ்ரெயா தன்வந்தரி, டினா தேசாய் உள்ளிட்டவர்கள் நடித்து வெளியானத் திரைப்படம் மும்பை டைரீஸ். முதல் சீச்சன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் வெளியாக இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -