Arjun Das Birthday : குரலழகன் அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
கைதி படத்தின் மூலம் ஹான்சமான வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திலும் கலக்கியிருந்தார். வில்லனாக நடித்து வந்தவர், இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் கதநாயகனாக நடித்திருந்தார். அநீதி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதும் மட்டும் அல்லாமல் அர்ஜுன் தாஸ் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து அடுத்து அடுத்து படங்களில் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகி வருகிறார் அர்ஜுன் தாஸ்.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின்மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த விஷால் வெங்கட் தற்போது அர்ஜுன் தாஸை வைத்து படம் இயக்கி வருகிறார்.
சுதா சுகுமார் தயாரிப்பில் நாசர், காளிவெங்கட், சிவாத்மிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார்.
அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது