நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள லட்சுமி மேனன்
லட்சுமி மேனன் மலையாள படமான ரகுவிந்தே ஸ்வந்தம் ரஸியா என்னும் படத்தில் அறிமுகம் ஆனார் பின்னர் தமிழில் கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் .
சுந்தரபாண்டியன் மற்றும் அவரது அடுத்த மூன்று தமிழ் படங்கள் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றன
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியான வெற்றிக்கு பிறகு வேகமாக வளர்ந்து வரும் நட்சத்திரம் என்னும் பெயரை பெற்றார்
சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமானுடன் ஒரு ஊர்லா ரெண்டு ராஜா படத்தில் பாடகராக அறிமுகமானார்.
கும்கி படத்திற்காக லட்சுமி மேனன் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது , நோர்வே தமிழ் திரைப்பட விழா விருது, 60 வது பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றார்
நடிகர் விஷாலுடன் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திற்காக 9வது விஜய் விருதை வென்றார்
கார்த்திக் சுப்புராஜ் படமான ஜிகர்தண்டா படத்தில் நடிகர் சித்தார்த் உடன் நடித்தார்.