Horror movies : ரெடியாக இருங்க மக்களே..அடுத்தடுத்து திகில் காட்ட வரும் பேய் படங்கள்!
கமர்ஷியல் படங்கள் மீது ஆர்வம் இல்லாதவர்களை கவர்ந்த பேய் படங்களை பாட்டி காலத்தில் இருந்து படமாக்கி திரையிட்டு வருகின்றனர்.
உள்ளூர் சிவி, அருந்ததி, முனி போன்ற படங்களை பார்த்த தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு பொன்னாக அமைந்தது தி கான்ஜுரிங்.
2013ல் வெளிவந்து திகில் காட்டிய இப்படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாக, இதன் நான்காம் பாகமான தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் ரிலீஸாகவுள்ளது.
கான்ஜுரிங் படத்தில் நரகத்தில் இருந்து நேரடியாக இறங்கி வரும் கதாபாத்திரமான நன்னின் வரலாற்றை விளக்க ‘நன்’ என்ற தனி படமே வெளியானது.
தற்போது, நன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. அமானுஷ்யம் நிறைந்த தேவலாயத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள இது, இதுவரை காணாத திகில் காட்சிகளை கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஈவிள் டெட் ரைஸ் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.