Saranya Ponvannan: 'வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே' சரண்யா பொன்வண்ணனின் சிறப்பான அம்மா கதாப்பாத்திரங்கள்!
களவாணி படத்தில், “ஆணி போய் ஆவணி வந்த என் பையன் டாப்-ல வருவான்..” என்ற டைலாக்கை படம் முழுவதும் கூறி, பலரது மனங்களில் இடம் பிடித்தார் சரண்யா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில், கள்ளம் கபடமற்ற தாயாக நடித்து ஹீரோவுடன் சேர்ந்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தன் மகனை கணவன் உட்பட யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் நடிக்கும் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக நடித்து தமிழ்நாட்டின் தாய்மார்கள் மகன்கள் மீது காட்டும் அன்பை யதார்த்தமாக வெளிப்படுத்தினார் சரண்யா பொன்வண்ணன்.
எம் மகன் படத்தில், கண்டிப்பான அப்பாவிடம் இருந்து மகனை காப்பாற்றும் தாயாக வாழ்ந்திருந்தார் சரண்யா.
ராம் படத்தில், மகனுக்கு தாயகவும், தோழியாகவும் நடித்து பலரையும் கண்கலங்க வைத்தார்.
நீர்ப்பறவை படத்தில், குடிகார மகனை நல்வழிப்படுத்த பாடுபடும் தாய்மார்களின் நிலையை தன் நடிப்பின் மூலம் பலருக்கு புரிய வைத்தார், சரண்யா.
முத்துக்கு முத்தாக படத்தில் தனது ஐந்து பிள்ளைகளின் மீது பாரபட்சம் காட்டாமல் பாசம் காட்டும் தாயாக நடித்திருந்தார்.
தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார்.
பாண்டி படத்தில் ராகவா லாரன்சுக்கு அம்மாவாக நடித்திருந்தார். படம் பார்ப்பவர்களுக்கு, தன் அம்மாவையே திரையில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை அளித்துவிட்டார் சரண்யா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -