Father' Day 2024: தந்தை - மகன் பாசத்தை சொன்ன தமிழ் சினிமா லிஸ்ட் - இதோ!
விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த சூரியவம்சம். அப்பா சரத்குமார் மகனை வீட்டை விட்டு வெளியேற்றியதும் மகன் சரத்குமார் மனைவியுடன் சேர்த்து பெரிய தொழிலதிபர் ஆகுவதை சிறப்பாக காட்சியமைத்திருப்பர் இயக்குநர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2006 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் வரலாறு. படத்தில் அஜித் குமார் அப்பாவாகவும் மகனாகவும் நடித்து இருப்பார்.
2008 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் மகனாக வரும் சூர்யா அப்பா மீது வைத்திருக்கும் பாசத்தை உருக்கமாக கூறியிருப்பார் இயக்குநர் .
2019 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். படத்தில் அப்பா விஜய் கேங்ஸ்டராகவும், மகன் விஜய் கால்பந்து வீரராக நடித்து இருப்பார்.
2017 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் அப்பவாகவும் மகனாகவும் நடித்து இருப்பார். இந்த படத்தில் 3 விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -