Thalapathy 68 Update : தொடங்கவிருக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்..உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தளபதி 68 படக்குழு அசுர வேகத்தில் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது.
லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தளபதி 68 படக்குழு அசுர வேகத்தில் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள முப்பரிமாண விஎஃப்எக்ஸ் ஸ்டுடியோவிற்கு வெங்கட் பிரபு, விஜய், ஏ.ஜி.எஸ் தயாரிப்பு சார்பாக அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
சில நாட்களுக்கு முன் தளபதி 68 படத்தில், விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்தது. இப்போது சிறுவயது விஜய் கதாபாத்திரத்திற்குதான் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
படத்தின் பூஜை அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த பின், படப்பிடிப்பு அக்டோபர் 2 முதல் தொடங்க உள்ளதாம். அத்துடன் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலும் பாடல்கள் மட்டும் வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட உள்ளது என சொல்லப்படுகிறது.
வெங்கட் பிரபுவின் தனித்துவமான ஸ்டைலில், தளபதி 68 படம் விஜய்க்கு வித்தியாசமாக அமையும் என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.