Thalapathy 68 : ‘எதிர்காலத்திற்கு வருக..’ ட்ரெண்டாகும் வெங்கட் பிரபுவின் ட்வீட்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்ததாக விஜய், வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சிம்ரன், ஜோதிகா, ப்ரியங்கா மோகன் ஆகியோரின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது.
தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய் உட்பட படக்குழுவை சேர்ந்த சிலர் கலிஃபோர்னியாவிற்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் ’விஜய் 68’ படத்துக்கான தொழில்நுட்பப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை பதிவிட்ட வெங்கட் பிரபு ‘எதிர்காலத்துக்கு வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த இண்டெர்நெட் வாசிகள் தளபதி 68 சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கலாம் என்றும் பல வகையான ஃபேன் மேட் போஸ்டர்களையும் தெரிக்கவிட்டு வருகின்றனர்.
மேலும் அதிக பொருட்செலவில் மேற்கொள்ளப்படும் இத்தொழில்நுட்பம் இதற்கு முன்னதாக சூர்யாவின் மாற்றான், ரஜினியின் 2.0 மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படங்களில் பயன்படுத்தி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -