Thalapathy 68 : ஒரே வீடியோவில் மொத்த அப்டேட்டையும் கொடுத்த தளபதி 68 படக்குழு..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
பிகில் படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிக்கவுள்ளது. அவரின் 68வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ஜெயராம், விடிவி கணேஷ், லைலா, அஜ்மல் அமீர்,யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தில் ஹீரோயினாக விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் நடித்த மீனாட்சி சௌத்ரி கமிட் ஆகியுள்ளார்.
முன்னதாக விஜய் நடித்த லியோ படம் வெளியான பிறகே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
இதனிடையே நேற்று (அக்டோபர் 23) ஏஜிஎஸ் நிறுவனம் ட்வீட் ஒன்றை வெளியிட்டது. அதில், “நாளை (அக்டோபர் 24) முதல் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும், விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நண்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன் இன்று பூஜை வீடியோவுடன் படக்குழுவினர் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
முன்னதாக தளபதி 68 படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.