Nani 31 : வெளியானது நானியின் புதிய திரைப்படத்தின் அப்டேட்..மீண்டும் வில்லனாகிறாரா எஸ்.ஜே.சூர்யா..?
தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக விளங்கும் நடிகர் நானி தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.நான் ஈ, வெப்பம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார்.
தற்போது மாஸான அடுத்த படத்தில் கமிட்டாகி உள்ளார். நானி நடிப்பில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா உடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார்.
டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி தயாரிக்கும் இப்படம் தெலுங்கில் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகும் என்ற அறிவிப்பினை பட குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ப்ரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.
வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளார்.
நானி நடிக்கும் 31வது படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானதை தொடர்ந்து இன்று படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் படத்தின் படு மாஸான க்ளிம்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.