Thalaivar 171 : விரைவில் துவங்க உள்ள தலைவர் 171 டீசர் ஷூட்டிங்!
லாவண்யா யுவராஜ் | 30 Mar 2024 03:15 PM (IST)
1
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
2
அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.
3
இதுவரையில் லோகேஷ் கனகராஜ் படத்தின் கதையை எழுதி வருவதாக தெரிவித்து இருந்தார்.
4
தற்போது அப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக உள்ளது.
6
ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
7
படத்தின் டீசர் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
8
டைட்டிலை ரிவீல் செய்யும் டீசர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளது.