Pongal 2024 : பொங்கலுக்கு என்னென்ன படங்கள் டிவியில் ஒளிப்பரப்பாகிறது தெரியுமா? முழு விவரம் இங்கே!
பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் தொலைக்காட்சிகளில் பொங்கல் ஸ்பெஷல் படங்களாக என்னென்ன ஒளிபரப்பாக போகின்றன என்பதை தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும். தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 16ம் தேதி வரை ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளனர். அவை என்ன பார்க்கலாம் வாங்க...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசன் டிவி : ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று மாலை 6.30 மணிக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புத்தம் புதிய திரைப்படம் 'லியோ' ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படம் இதுவாகும்.
கலைஞர் டிவி : ஜனவரி 15 , பொங்கல் தினத்தன்று அறிமுக இயக்குநர் கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் நடிப்பில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
கலைஞர் டிவி : ஜனவரி 16 , மாட்டு பொங்கல் தினத்தன்று ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இறைவன்' சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவி : ஜனவரி 14ம் தேதி மதியம் 3 மணிக்கு அமிதேஷ், சரத்குமார் நடித்த 'பரம்பொருள்'. ஜனவரி 15ம் தேதி மதியம் 3.30 மணிக்கு மாமன்னன், இரவு 9 மணிக்கு 'போர்தொழில்'. ஜனவரி 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு 'பிச்சைக்காரன் 2 ', இரவு 9 மணிக்கு 'குட் நைட்' படமும் ஒளிபரப்பாகின்றன.
ஜீ தமிழ் : ஜனவரி 14ம் தேதி அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் படம் 'ஜவான்' மதியம் 3.30 ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ் : ஜனவரி 15ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஜனவரி 16ம் தேதி ஆதி ஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளியான 'வீரன்' திரைப்படம் பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -