Cook with Comali 5 : இப்போதைக்கு இவங்கதான்..குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் !
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ 'குக் வித் கோமாளி'. இதன் 5 வது சீசன் விரைவில் துவங்க உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமலையாள சினிமாவை சேர்ந்த நடிகையான ஷாலின் ஜோயா குக் வித் கோமாளி சீசன் 5 மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாக உள்ளார்.
பிரபலமான யூடியூபர் இர்ஃபான் போட்டியாளர்களின் ஒருவராக என்ட்ரி கொடுக்கிறார்.
தமிழில் பேசி அசத்தும் வெளிநாட்டு விவசாயியான கிருஷ்ணா மெக்கன்சி கலந்து கொள்கிறார். கடந்த சீசனில் ஆண்ட்ரியன் போல இந்த சீசனில் கிருஷ்ணா மெக்கன்சி.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக ஜொலிக்கும் திவ்யா துரைசாமி ஒரு போட்டியாளர்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தன்னுடைய சமையல் திறமையை நிரூபிக்க போட்டியாளர்களின் ஒருவராக களம் இறங்குகிறார்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வரும் நடிகர் வசந்த் வாசி கலந்து கொள்கிறார்.
அனைவருக்கும் மிகவும் ஃபேவரட்டான நடிகர் விடிவி கணேஷ் காமெடியுடன் சமையலையும் ஒரு கை பார்க்க வருகிறார்.
விஜய் டிவியின் பிரபலமான ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -