TVK : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய தவெக உறுப்பினர்கள்!
தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். சமூக பிரச்சினைகளை பேசும் படங்களிலும் மறைமுகமாக அரசியல் பேசும் படங்களிலும் நடித்து வந்தார். இதனால் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பக்கம் இவை இருந்தாலும் மறு பக்கம் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இவர்கள் நாளடைவில், “விஜய் மக்கள் இயக்கம்” என்ற நற்பணி மன்றமாக ஒன்று திரண்டு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மக்கள் இயக்கமாக இருந்த போதே பல உதவிகள் மக்களுக்கு செய்துவந்தனர். ரத்த தானம், அன்னதானம் போன்ற சமூக சேவைகளும் செய்து வந்தனர்.
விஜய் முன்னிலையில், மக்கள் இயக்கம் ஒன்றாக சேர்ந்து, தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து பரிசு வழங்கி சிறப்பித்தனர்.
விஜய் எப்போது அரசியல் வருவார்? என்ற கேள்வி ஊடகத்துறையினர் மத்தியிலும் ரசிகர் மத்தியிலும் நிலவி வர, “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிகழ்வு விமர்சனங்களையும், வரவேற்புகளையும் பெற்றது.
இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் உணவு வழங்கினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -