Tamil Movies : ஜூலை 29 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்!
1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் மண் வாசனை. இப்படத்தில் பாண்டியன், ரேவதி, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து இருந்தனர்.
மண் வாசனை ரேவதியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 41 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2005 ஆம் ஆண்டு பாபு யோசுகேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தாஸ். இப்படத்தில் ஜெயம் ரவி, ரேணுகா மேனன், வடிவேலு ஆகியோர் நடித்து இருந்தனர்.
இரு மதத்தை சேர்த்தவர்கள் காதலிப்பதால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2011 ஆம் ஆண்டு அஞ்சன அலி கான் இயக்கத்தில் வெளிவந்த படம் வெப்பம். இப்படத்தில் நானி, பிந்து மாதவி, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்து இருந்தார்.
வெப்பம் படம் நானி நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.