January 29 releases : சத்யா முதல் அரண்மனை 2 வரை.. ஜனவரி 29 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்!
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன், அமலா உள்ளிட்ட பலரது நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் படம் சத்யா. இப்படத்தை தயாரித்த கமலுக்கு, திரைக்கதையிலும் பங்குண்டு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகர் விஜய் திரைப் பயணத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிம்ரன் - விஜய் காம்போவும் சிறப்பாக அமைந்திருக்கும். 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்த படம். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இன்று வரை இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஃபேவரட் பாடல்களாக இருந்து வருகின்றன
சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலா கபடிகுழு. கிராமத்து பின்னணியில் நகரும் இக்கதையில் காமெடி கலந்த சீரியஸான காட்சிகள் இடம்பெற்று இருக்கும். விஷ்ணு விஷால், கிஷோர், அப்புக்குட்டி, சூரி, சரண்யா உள்ளிட்டோர் இதில் நடித்திருப்பர்.
2010 ஆம் ஆண்டில் வெளியான இப்படம், அந்த காலக்கட்டம் வரை வந்திருக்கும் அனைத்து படங்களையும் ட்ரால் செய்யும் வகையில் அமைந்தது. இதில் சிவா, திஷா பாண்டே, சதீஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ் படத்தில் இடம்பெற்று இருக்கும் ஓ மஹா சியா பாடல், செம ஹிட்டானது.
ரஜினிகாந்த் நடிக்கவிருந்த ஜக்குபாய் படம் சில காரணங்களால், சரத்குமாரிடம் சென்றது. 2010ல் வெளியான கே.எஸ் ரவிகுமாரின் இந்த படைப்பில் ஸ்ரேயா சரண், கவுண்டமணி, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு கோவா ட்ரிப் போக வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டது வெங்கட் பிரபுவின் கோவா படமே. ஜெய், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், வைபவ், சம்பத் ராஜ், பியா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியானது
சுதா கொங்காரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் உருவான படம் இறுதிச்சுற்று. பாக்சிங்கை அடிப்படையாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும், 2016 ஆம் ஆண்டு வந்த இப்படம் தனி அடையாளத்தை பெற்றது. இப்படத்தின் பாடல்களும் செம ஹிட்.
அரண்மனை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் அரண்மனை 2. இதில் சுந்தர் சியுடன், சித்தார்த், ஹன்சிகா, திரிஷா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -