Tamil Movie Releases : மின்சார கண்ணா படம் முதல் தொட்டி ஜெயா படம் வரை.. இந்த நாளில் வெளியான தமிழ் படங்கள்
1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருத்த படம் மின்சார கண்ணா. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆண்கள் என்றாலே பிடிக்காத குஷ்பூவின் தங்கையை விஜய் காதலிக்கிறார். குஷ்பூவின் சம்மதத்திற்காக பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கும் விஜய் குடும்பத்தினர் வேலைக்காரர்களாக குஷ்பூ வீட்டிற்குள் நுழைகின்றனர். இது குஷ்பூவிற்கு தெரிந்துவிட அதன் பிறகு விஜய்யின் காதல் எப்படி சேர்ந்தது என்பதே மீத கதை.
1999 ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருந்த படம் ஜோடி. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பிரசாந்த் சிம்ரன் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண செய்து கொள்ள நினைக்கின்றனர். இதற்காக பிரசாந்த் வீட்டிற்கு சிம்ரனும், சிம்ரன் வீட்டிற்கு பிரசாந்தும் சென்று நாடகம் நடத்துகின்றனர். கடைசியில் திருமணம் ஆனதா? என்பதே மீத கதை.
2005 ஆம் ஆண்டு வி எஸ் துரை இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் தொட்டி ஜெயா.
இப்படத்தில் கோபிகா, வடிவுக்கரசி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் ஆண்டுகளை நிறைவு செய்கிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -